close
Choose your channels

மீண்டும் இணையும் ரஜினி-கமல்

Friday, January 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒருபக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் கடந்த 10ஆம் தேதி வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாகியுள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் கமல்ஹாசனின் 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த இரண்டு படங்களின் செய்திகளும் சமூக வலைத்தளங்களில் டிரண்டிங்கில் உள்ளது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள 'இளையராஜா 75' இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதித்துள்ளனர். இந்த தகவலை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உறுதி செய்துள்ளார்.

கடந்த 2017ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாள் தினத்தில் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் ரஜினி, கமல் கலந்து கொண்ட பின்னர் மீண்டும் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.