சிபிராஜின் அடுத்த படத்திற்கு ரஜினி பட டைட்டில்

  • IndiaGlitz, [Monday,April 24 2017]

நாய்கள் ஜாக்கிரதை', 'ஜாக்சன் துரை', 'கட்டப்பாவ காணோம்' படங்களுக்கு அடுத்து சிபிராஜ் தற்போது 'நாளைய இயக்குனர்' புகழ் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிபிராஜூக்கு ஜோடியாக நிகிலா விமல் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சசிகுமாரின் 'கிடாரி', 'வெற்றிவேல்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு 'ரங்கா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதே டைட்டிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா நடிப்பில் கடந்த 1982ஆம் ஆண்டு ஒரு திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்ஜீவன் இசையமைப்பில், ஆனந்த் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய் செல்லையா என்பவர் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

More News

'பாகுபலி'யை அடுத்து மீண்டும் பிரமாண்டமான படத்தில் பிரபாஸ்

இந்தியாவின் பிரமாண்ட திரைப்படங்களான 'பாகுபலி மற்றும் 'பாகுபலி 2' படங்களுக்காக சுமார் ஐந்து வருடங்கள் வேறு எந்த படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருந்த நடிகர் பிரபாஸ் தற்போது மீண்டும் பிரமாண்டமாக தயாராகி வரும் ஒரு மும்மொழி படத்தில் நடித்து வருகிறார்...

சூர்யா மிஸ் செய்த காதல் மன்னன் கேரக்டரில் மணிரத்னம் நாயகன்

நடிகையர் திலகம் சாவித்ரி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சாவித்ரி கேரக்டரில் கீர்த்திசுரேஷூம் மற்றொரு முக்கிய கேரக்டரில் சமந்தாவும் நடித்து வருகின்றனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

தளபதி 61: விஜய்யுடன் இணையும் வடிவேலு குறித்த முக்கிய தகவல்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் சென்னை மற்றும் ராஜஸ்தான் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் சென்னையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்குகிறது. இதுவரை விஜய்-நித்யாமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் நடைபெற்ற நிலையில் தற்போதைய இந்த படப்பிடிப்பில் விஜய்யுடன் காஜல் அகர்வால் இ&#

'ஜானகி' என்னும் அதிசய கானக்குயிலின் பிறந்த நாள் சிறப்பு பகிர்வு

'16 வயதினிலே' படத்தில் இடம்பெற்ற 'செந்தூரப்பூவே' பாடல், 'தேவர் மகன்' படத்தில் இடபெற்ற 'இஞ்சி இடுப்பழகி' பாடல் உள்பட நான்கு தேசிய விருதுகள் பெற்ற கானக்குயில் ஜானகி அம்மாள் அவர்களின் பிறந்த நாள் இன்று. இன்றைய அவருடைய பிறந்த நாளில் அவரைப் பற்றிய சில அரிய முத்துக்களை பகிர்ந்து கொள்வோம்...