close
Choose your channels

போதைக்கு அடிமையானவரா ரஜினியின் மகள்?

Sunday, August 16, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அட்டக்கத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித், அடுத்து இயக்கவுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் ராதிகா ஆப்தே உள்பட படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர், நடிகைகளும் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க பல நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கேரக்டருக்கு தன்ஷிகா தேர்வு செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தன்ஷிகாவின் கேரக்டர் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. தன்ஷிகா இந்த படத்தில் போதைக்கு அடிமையான ஒரு பெண்ணாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, கலையரசன், அட்டக்கத்தி தினேஷ், தன்ஷிகா உள்பட பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் முதல் மலேசியாவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.