close
Choose your channels

நான் தான் உண்மையான 'அண்ணாமலை' பால்காரன்: எச்.ராஜா

Wednesday, July 31, 2019 • தமிழ் Comments

நடிகர் ரஜினிகாந்த் ரீல் வாழ்க்கையில் மட்டுமே அண்ணாமலை என்றும் மாட்டுத்தொழுவத்திலேயே பிறந்து வளர்ந்த தான் நிஜ வாழ்க்கையில் அண்ணாமலை என்றும், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

மதுரை வைகை கரை அருகில்  நடைபெற்ற வைகை பெருவிழாவில் கலந்து கொண்டு பேசிய எச்.ராஜா, 'நான் பிறந்ததே மாட்டுத்தொழுவத்தில் தான். நான் சிறுவயதில் நானே பால் கறந்து, அந்த பாலை விற்று பள்ளியில் சென்று படித்தேன்.  ரஜினிகாந்த் ரீல் லைஃபில் அண்ணாமலை என்றால், நான் ரியல் லைஃபில் அண்ணாமலையாக வாழ்ந்தவன் என்று கூறினார்.

எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இருப்பினும் ஒருசிலர் எச்.ராஜாவுக்கு ஆதரவாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். எச்.ராஜாவின் இந்த கருத்து குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை கீழே உள்ள கமெண்ட் பகுதியில் பதிவு செய்யவும்

Get Breaking News Alerts From IndiaGlitz