கேன்ஸ் விழாவில் அணியும் உடையா இது? ரஜினி, விஜய் பட நடிகைக்கு நெட்டிசன்கள் கண்டனம்..!

  • IndiaGlitz, [Thursday,May 18 2023]

பிரான்ஸ் நாட்டில் தற்போது கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் அதில் பல இந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். நடிகை ஐஸ்வர்யா ராய் இந்த நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக 20வது ஆண்டு கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு அவர் தனது மகளுடன் கலந்து கொண்டார். மேலும் சாரா அலிகான், மனுஷி செல்லார், ஈஷா குப்தா, ஊர்வசி ரவுட்டாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்ட நடிகைகளில் ஒருவர் எமி ஜாக்சன். ’மதராச பட்டணம்’ என்ற திரைப்படத்தில் தமிழில் அறிமுகமாகி அதன்பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’2.0’ விஜய் நடித்த ’தெறி’ தனுஷ் நடித்த ‘தங்க மகன்’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது அவர் ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் ’அச்சம் என்பது இல்லையே’ என்ற படத்தில் அருண் விஜய் உடன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள விரிப்பில் கிளாமர் உடை அணிந்து எமி ஜாக்சன் வந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன. கேன்ஸ் போன்ற உலக புகழ்பெற்ற திரைப்பட விழாவில் இப்படியா உடை அணிந்து செல்வது? என அவரது உடைக்கு நெட்டிசன்களின் கண்டனங்கள் குவிந்து வருகிறது.

More News

தேசிங்கு பெரியசாமி படத்திற்காக லண்டன் செல்லும் சிம்பு.. காரணம் இதுதான்..!

சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே

ரஜினிகாந்த் - கபில்தேவ் சந்திப்பு இதற்குத்தானா? ரசிகர்கள் செம குஷி..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சந்தித்தார் என்ற செய்தியையும் இந்த சந்திப்பு குறித்த புகைப்படம் மற்றும் நெகிழ்ச்சியான பதிவை கபில்தேவ் தனது இன்ஸ்டாகிராம்

இந்த வாரம் ஓடிடியில் எத்தனை தமிழ் படங்கள்? முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் தமிழ் உட்பட பல மொழிகளில் உள்ள திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகின்றன என்ற விவரத்தை பார்த்து வருகிறோம். அந்த வகையில் அந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் முழு விவரங்களை

5 நிமிடம் செல்போன் இல்லாமல் இருக்க முடியுமா? இந்தியர்களைப் பாதிக்கும் நோமோஃபோபியா!

சமீபத்தில் செல்போன் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்தியாவிலுள்ள ஸ்மார்ட்போன் பயனாளர்கள் பலரும் நோமோஃபோபியா எனும் புதுவகை பயத்தை அனுபவித்து வருவதாக

81 வயதில் பிகினி போஸ்… உலக அளவில் திரும்பி பார்க்க வைத்த மாடல் அழகி!

வயதிற்கும் அழகுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 81 வயதில் நீச்சல் உடை அணிந்து பலரையும் அசர வைத்திருக்கிறார் பிரபல தொழிலதிபரும் மாடலுமான மார்த்தா ஸ்ட்வர்ட்