close
Choose your channels

ரஜினியுடன் மோதும் கார்த்தி-விஷால்?

Thursday, September 26, 2019 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது 

இந்த நிலையில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி வரும் படமும் வரும் பொங்கலன்று திரையிட திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு தீபாவளி அன்று விஜயின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ‘கிதி’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் வரும் பொங்கல் அன்று ரஜினி, கார்த்தி படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி விஷால் நடித்து வரும்’விஷால் 28’ திரைப்படமும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. இதனை அடுத்து வரும் பொங்கல் அன்று ரஜினி, விஷால், மற்றும் கார்த்தி ஆகிய மூவர் படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

விஷால், ஷராதாஸ்ரீநாத், ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஆனந்தன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது

Get Breaking News Alerts From IndiaGlitz