close
Choose your channels

தேசிங்கு பெரியசாமி அடுத்த படத்தில் ரஜினிகாந்த்? அவரே அளித்த முக்கிய தகவல்!

Monday, August 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் திரைப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார் என்ற தகவல் கடந்த சில மாதங்களுக்கு முன் பரவிய நிலையில் தற்போது அவர் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

துல்கர் சல்மான், ரிதுவர்மா நடித்த ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற திரைப்படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படம் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்ட நிலையில் தற்போது ரஜினிகாந்த் 'ஜெயிலர்’ என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும், இந்த படத்தை நெல்சன் இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தேசிங்கு பெரியசாமி தனது இரண்டாவது படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளார். இருப்பினும் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு தனக்கு நிச்சயம் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனது இரண்டாவது படம் குறித்த அறிவிப்பை மிக விரைவில் அவர் அறிவிக்க இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.