ரஜினிகாந்த்-அஜித் சந்திப்பா? பரபரப்பில் தமிழக அரசியல்!

  • IndiaGlitz, [Wednesday,December 11 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்பதை ஏற்கனவேயும், இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’தலைவர் 168’ படத்தின் அறிமுக பாடல் தயாராக இருப்பதாகவும் இந்த பாடலை கடந்த சில நாட்களுக்கு முன்னர் டி இமான் கம்போஸ் செய்து முடித்து விட்டதாகவும் இதனை அடுத்து ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த பாடலின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாகவும், இதற்கான ஏற்பாடுகளில் இயக்குனர் சிறுத்தை சிவா தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே தல அஜித்தின் ’வலிமை’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் அதே ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது என்பதும், ‘வலிமை’ படத்திற்கான செட்கள் தயாராக இருக்கின்றது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து தலைவர் மற்றும் தல சந்திப்பு ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் அரசியலில் இறங்க உள்ள நிலையில், அஜித்தை அதிமுக உள்பட ஒருசில கட்சிகள் அரசியலுக்கு வர வேண்டிய அழைப்பு விடுத்து வரும் நிலையில், இருவரும் சந்தித்தால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

'தலைவர் 168' படத்தின் அடுத்த அதிரடி தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'தலைவர் 168' திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் கடந்த இரண்டு நாட்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியானது

அக்கா, தங்கையை கரெக்ட் செய்ய முயன்ற வாலிபர்: திடுக்கிடும் கொலையில் திடீர் திருப்பம்

கொடைக்கானல் அருகே அக்கா, தங்கை இருவரையும் கரெக்ட் செய்ய முயன்ற ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டதும் அந்தக் கொலை தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டதுமான பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது 

'தளபதி 64' நாயகிக்கு கிடைத்த பாலிட் வாய்ப்பு!

.தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா

பாஜக பிரமுகரை சந்தித்த நயன்தாரா: அரசியலில் ஈடுபட திட்டமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் ஆலயத்திலும், திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலும் தரிசனம் செய்தார் என்று வெளிவந்த

தளபதி விஜய்யால் கர்நாடகாவில் பெரும் பரபரப்பு

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் 'தளபதி 64' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் டெல்லியிலும் நடைபெற்றது