close
Choose your channels

ரஜினியின் அடுத்த படம்: மீண்டும் இணையும் இளம் இயக்குனர்!

Monday, February 8, 2021 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நிலையில் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்டு மீண்டும் இளம் இயக்குனர் ஒருவருடன் ரஜினி இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் பேட்ட’. நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினியின் ஸ்டைல் மற்றும் ஆக்சன் நிறைந்த முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்டு மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து ஒரு படத்தில் ரஜினிகாந்த் பணிபுரிய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் சந்திப்பு நடந்ததாகவும் இந்த சந்திப்பின்போது ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவது கார்த்திக் சுப்புராஜ் தான் என உறுதி செய்யப்பட்டதாகவும், விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மீண்டும் ரஜினிகாந்த் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இணைய உள்ளது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz