close
Choose your channels

'தர்பார்' படப்பிடிப்பிற்காக ஜெய்ப்பூர் பறந்த ரஜினி-நயன்தாரா

Saturday, August 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பேட்ட' வெற்றிக்கு பின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் மும்பையில் வரலாறு காணாத மழை காரணமாக படப்பிடிப்பு தடைபட்டது. இதனையடுத்து 'தர்பார்' டீம் சென்னை திரும்பியது

இந்த நிலையில் மும்பைக்கு பதில் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பை தொடர இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்பட படக்குழுவினர் முடிவெடுத்ததை அடுத்து வரும் திங்கள் முதல் ஜெய்ப்பூரில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதனையடுத்து இன்று ரஜினிகாந்த், நயன்தாரா உள்பட படக்குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் ஜெய்ப்பூர் சென்றனர். ரஜினியும் நயன்தாராவும் அருகருகே விமானத்தில் அமர்ந்து பயணம் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது

வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ள 'தர்பார்' திரைப்படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, ஹரிஷ் உத்தமன், மனோபாலா, சுமன், ஆனந்த்ராஜ், ஸ்ரீமான் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இளம் இசைப்புயல் அனிருத் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் லைகாவின் தயாரிப்பில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.