மக்களுக்கு ரொம்ப நல்லது பண்றீங்க: ரஜினியின் பாராட்டை பெற்ற டாக்டர்

  • IndiaGlitz, [Monday,July 06 2020]

கொரோனா வைரஸ்க்கு இன்னும் தடுப்பு மருந்து மற்றும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை எனினும் அலோபதி மற்றும் சித்தா ஆகிய இரண்டு முறைகளிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக அரசின் அனுமதி பெற்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள ஜவகர் என்ஜினீயரிங் கல்லூரியில் கொரோனா நோயாளிக்ளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

டாக்டர் வீரபாபுவின் குழுவினர் இந்த மருத்துவ மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு ஆவி பிடித்தல், சூரியக்குளியல், மூலிகை தேனீர், சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும் இந்த சிகிச்சை முறையால் இதுவரை சுமார் 550 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியதாகவும், 200க்கும் மேற்பட்டோர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இது குறித்த செய்திகளை பத்திரிகைகளில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சித்தா டாக்டர் வீரபாபுவை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். ;உங்களது சேவை சார்ந்த செய்திகளை தொடர்ந்து பார்த்து, படித்து வருகிறேன். கொரோனா பாதிப்பு நேரத்தில், மக்களுக்கு நல்லது செய்து வருகிறீர்கள். உங்களின் செயல்பாடுகள் ரொம்ப மகிழ்ச்சியாகவும், பிரமிப்பாகவும் உள்ளது. ரொம்ப ரொம்ப சந்தோஷம்; ஊரடங்கு முடிந்ததும், நாம் சந்திப்போம்' என்று ரஜினி பாராட்டி உள்ளார்.

ரஜினிகாந்தின் இந்த பாராட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி ஒத்துழைப்புடன் தொடர்ந்து கொரோனா நோயாளிகளுக்கு இந்த சேவையை செய்ய இருப்பதாகவும் டாக்டர் வீரபாபு தெரிவித்துள்ளார்

More News

விமான நிலையத்தில் குட்டித்தூக்கம்: ஃபிளைட்டை மிஸ் செய்த இந்தியரால் துபாயில் பரபரப்பு

துபாயில் இருந்து இந்தியா திரும்ப விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர் ஒருவர் ஒரு குட்டி தூக்கம் போட்டதால் விமானத்தை தவற விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

அடையாளமே தெரியாத சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி: வைரலாகும் புகைப்படங்கள்

விஜய் டிவி பல திறமையாளர்களை அடையாளம் கண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தி வரும் நிலையில் அந்த பட்டியலில் செந்தில்-ராஜலட்சுமி தம்பதியும் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே.

மீண்டும் 4000ஐ தாண்டிய கொரோனா: சென்னையில் 2 வது நாளாக குறைந்த பாதிப்பு

தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு 4000ஐ தாண்டிய நிலையில் இன்றும் 4வது நாளாகவும் 4000ஐ தாண்டியுள்ளது.

மறதி எப்போதும் மாறாதது தமிழனுக்கு: பிரசன்னாவின் டுவிட்டுக்கு பதிலளித்த இயக்குனர்

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரபரப்பையும் மீறி கடந்த சில நாட்களாக ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணம், ஜெயப்பிரியா மரணம் ஆகியவை ஊடகங்களில் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது.

கீர்த்திசுரேஷின் அடுத்த படம்: முக்கிய அறிவிப்பை வெளியிட்ட 'தளபதி 65' இசையமைப்பாளர்

நடிகையர் திலகம் என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த 'பெண்குயின்' திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே