close
Choose your channels

மனைவி, மகள்கள், பேரன்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய ரஜினிகாந்த்: அசத்தல் புகைப்படம்

Monday, December 13, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார் என்பதும் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், ரசிகர்கள் என பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

குறிப்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் முக ஸ்டாலின், உலக நாயகன் கமல்ஹாசன், கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்பட பலர் வாழ்த்துக்களை தங்களது சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை தனது வீட்டில் குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த், அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா தனுஷ், சௌந்தர்யா ரஜினிகாந்த், மற்றும் பேரன்கள், ரஜினியின் சகோதரர் சத்யநாராயணா உள்பட குடும்பத்தினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கு அவரது குடும்பத்தினர் வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.