ரிஷிகேஷில் ரஜினிகாந்த் வாங்கிய புத்தகம்: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Thursday,October 17 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ஏஆர் முருகதாஸ் இயக்கியுள்ள ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடிந்த பின்னர், பத்து நாள் ஆன்மீகச் சுற்றுப் பயணமாக இமயமலையில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத், ரிஷிகேஷ் ஆகிய பகுதிகளுக்கும் சென்றுள்ளார் என்பது ஏற்கனவே தெரிந்ததே.

மகள் ஐஸ்வர்யா தனுஷூடன் ஆன்மீகச் சுற்றுப் பயணம் செய்துள்ள ரஜினிகாந்த், பாபா ஆசிரமத்தில் புத்தகம் வாங்கும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இன்று அவர் தனது மகளுடன் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த ஆசிரமத்துக்கும், பாபா ஆசிரமத்திற்கும் சென்றுள்ளார். அங்குள்ள புத்தகம் நிலையம் ஒன்றில் புத்தகம் வாங்கி அந்த புத்தகம் குறித்து கடைக்காரரிடம் விளக்கம் கேட்கும் வீடியோ ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் தனது ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய உடன் ரஜினிகாந்த் ’தர்பார்’ படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட உள்ளதாகவும் அதனை அடுத்து அவர் சிறுத்தை சிவா இயக்கும் ’தலைவர் 168’படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது .

More News

தீபாவளி தினத்தில் திடீரென களத்தில் குதிக்கும் ஜெயம் ரவி திரைப்படம்

வரும் தீபாவளி தின விருந்தாக விஜய்யின் 'பிகில்' மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் திடீரென தீபாவளி களத்தில் ஜெயம் ரவியின் கோமாளி திரைப்படமும் குதித்துள்ளது 

நயன்தாராவின் 'நெற்றிக்கண்' குறித்த புதிய அப்டேட்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலந்த் ராவ் இயக்கி வரும்'நெற்றிக்கண்'என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

விஷாலின் 'ஆக்சன்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்!

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆக்சன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீஸூக்கு தயார் நிலையில் உள்ளது

'பிகில்' பெயரை விளம்பரத்திற்கு பயன்படுத்திய ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் பெண்கள் கால்பந்து போட்டியை மையமாக கொண்ட கதை என்பதால் இந்த படத்தில் கால்பந்து போட்டிகள் குறித்தும், விளையாட்டில் உள்ள அரசியல் குறித்தும்

'பிகில்' பட வழக்கின் தீர்ப்பு குறித்த அதிரடி தகவல்!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய 'பிகில்' திரைப்படம் அக்டோபர் 25ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது