close
Choose your channels
Kaatrin Mozhi

சிரிச்சு சிரிச்சு என்ஜாய் பண்ணினேன். நெல்சனுக்கு வந்த சர்ப்ரைஸ் அழைப்பு

Monday, August 20, 2018 • தமிழ் Comments

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் கடந்த வெள்ளியன்று வெளியான 'கோலமாவு கோகிலா' திரைப்படத்திற்கு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தள பயனாளிகள் பாசிட்டிவ் ரிசல்ட்டுக்களை கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் குழுவினர்களுக்கு திரையுலக பிரமுகர்களிடம் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று 'கோலமாவு கோகிலா' படத்தை பார்த்து இயக்குனர் நெல்சனுக்கு போன் மூலம் பாராட்டியுள்ளார். அப்போது அவர் ' படத்தை பார்த்து சிரித்து சிரித்து என்ஜாய் செய்ததாக கூறியுள்ளார். ரஜினியின் பாராட்டு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாகவும், அவருடைய அழைப்பு தனக்கு மிகவும் சர்ப்ரைஸ் ஆக இருந்ததாகவும், அவருக்கு தனது நன்றி என்றும் இயக்குனர் நெல்சன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

இதேபோல் 'கோலமாவு கோகிலா' படத்தை மிகவும் ரசித்ததாகவும், இதுவொரு குடும்ப க்ரைம் கதை என்றும், நயன்தாராவின் அமைதியான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாகவும் இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் ஒவ்வொரு கேரக்டர்களும் ஜொலித்ததாகவும், அனிருத்தின் இசை சூப்பர் என்றும், குறிப்பாக 'கன் - இன் - காதல் பாடல் சரியான இடத்தில் வைத்த இயக்குனர் நெல்சனுக்கு பாராட்டுக்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். திரைவிமர்சனம் கோலமாவு கோகிலா