'நடக்க வேண்டிய நேரத்துல கரெக்டா நடக்கும்.. ரஜினியின் 'கூலி' படத்தின் மாஸ் அப்டேட்..!

  • IndiaGlitz, [Sunday,May 05 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் முக்கிய பணியாற்றும் ஒருவர் மாஸ் அப்டேட் கொடுத்த நிலையில் அந்த அப்டேட் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகி வரும் உருவாக இருக்கும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் திரைக்கதை எழுதும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்தி வெளியானது.

இந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதை எழுதும் குழுவில் உள்ள சந்துரு அன்பழகன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவருடைய உதவி இயக்குனர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து ‘கூலி’ படத்தின் முதல் பாகத்தின் திரைக்கதை எழுதும் பணி முடிந்து விட்டதாகவும் அடுத்தபடியாக இரண்டாம் பாகத்தின் திரைக்கதை எழுதும் பணியை தொடங்க உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் அவர் ’எப்போ நடக்கணும், எப்படி நடக்கணும்னு யாருக்கும் தெரியாது, ஆனால் நடக்க வேண்டிய நேரத்துல கரெக்டா நடக்கும்’ என்ற பஞ்ச் டயலாக்கை பதிவு செய்துள்ளார். இவர் ஏற்கனவே ’மாநகரம்’ ’மாவீரன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் என்பதும் தற்போது ‘கூலி’ படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘கூலி’ படத்தின் மாஸ் அப்டேட் உடன் கூடிய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

குஷ்பு அக்காவுக்கு எனது நன்றி.. மாஸ் வீடியோவை வெளியிட்ட சிம்ரன்..!

குஷ்பு அக்காவுக்கும், சுந்தர் சி சார் அவர்களுக்கும் நன்றி என நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பதிவு செய்துள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிறந்தநாளில் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்றாரா த்ரிஷா? வைரல் புகைப்படம்..!

நடிகை த்ரிஷா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் இன்று அவர் சில புகைப்படங்களை பதிவு செய்து  தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

லேட்டானாலும் ஃபயரான டைட்டிலை அறிவித்த அர்ச்சனா கல்பாத்தி.. மாஸ் வீடியோ..!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் டைட்டில் இன்று காலை 9 மணிக்கு வெளியாகும்

'இந்தியன் 2' ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு? தனுஷ் படத்திற்கு அடித்த ஜாக்பாட்.. ஓப்பனிங் வசூல் அள்ளுமா?

கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' மற்றும் தனுஷ் நடித்த 'ராயன்' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது 'இந்தியன் 2' திரைப்படம்

7 மொழிகளில் ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் தமிழ் சீரியல்.. இதுதான் முதல் முறை..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழ் சீரியல் முதல் முறையாக 7 மொழிகளில் ரீமேக் செய்யப்படுவதாக அந்த சீரியலில் நடித்து வரும் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.