அத்திவரதரை தரிசனம் செய்தார் ரஜினிகாந்த்! 

  • IndiaGlitz, [Wednesday,August 14 2019]

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டிருக்கும் அத்திவரதரின் திருவுருவம் ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை தண்ணீரில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டு பக்தர்களுக்குக் காட்சியளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது

அந்த வகையில் கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் வரதராஜ பெருமாள் கோவிலின் வசந்த மண்டபத்தில் 24 நாட்கள் சயன நிலையிலும், 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி தந்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் வரும் 17ஆம் தேதி மீண்டும் அத்திவரதர் குளத்தில் வைக்கப்படுவார் என காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே அத்திவரதரை தரிசனம் செய்ய முடியும் என்பதால் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகின்றது

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மனைவி லதாவுடன் இன்று அதிகாலை காஞ்சிபுரத்திற்கு வந்து அத்திவரதரை தரிசனம் செய்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்த கோவில் அதிகாரிகள் அவர் தரிசனம் செய்து புறப்படும் வரை தகுந்த பாதுகாப்பை அளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்தின் குடும்பத்தினர் அத்திவரதரை சந்திக்க காஞ்சிபுரம் வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

'பிகில்' படப்பிடிப்பு நிறைவு நாளில் விஜய் செய்த பொன்னான விஷயம்!

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் நேற்றுடன் விஜய் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது

ஜெயம் ரவியின் 'கோமாளி' சென்சார் தகவல்

ஜெயம் ரவி நடிப்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கிய 'கோமாளி' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில்

'பிகில்' விஜய் குறித்த முக்கிய அப்டேட்: ரசிகர்கள் உற்சாகம்

தளபதி விஜய் நடித்து வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்துடன் முடிந்துவிடும் என்று வெளிவந்த செய்தியை பார்த்தோம்.

திருச்சியில் இனி புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை: கோமாளி பிரச்சனையில் அதிரடி முடிவெடுத்த தயாரிப்பாளர் சங்கம்!

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ள நிலையில் திருச்சி ஏரியாவில் மட்டும்

காஷ்மீர் விவகாரத்தில் ரஜினியின் குரல் தமிழகத்தின் குரல்: பிரபல அரசியல்வாதி

காஷ்மீரில் 370 ஆவது சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் மத்திய அரசு நீக்கி, அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க முடிவு எடுத்துள்ளது.