close
Choose your channels

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ரஜினிகாந்த் நண்பரின் பேத்தி!

Monday, July 26, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நெருங்கிய நண்பரின் பேத்தி நடிகை தன்யா ராம்குமார் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நெருங்கிய நண்பர் என்பதும் ராஜ்குமாரை சந்தன கடத்தல் வீரப்பன் கடத்தி வைத்திருந்தபோது அவரை விடுதலை செய்ய வேண்டும் என குரல் கொடுத்தவர்களில் ரஜினிகாந்தும் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் ஏற்கனவே கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நிலையில் தற்போது அவருடைய பேத்தியும் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

ராஜ்குமாரின் மகள் வழி பேத்தியான தன்யா ராம்குமார் ஏற்கனவே கன்னட திரையுலகில் ஒரு சில திரைப்படங்கள் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தற்போது தமிழில் அறிமுகமாக இருப்பதாகவும் அவர் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னட சூப்பர் ஸ்டாரின் பேத்தி தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருப்பதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.