அரசியல் களத்தில் கமலை விட ரஜினிக்கு ஆதரவு அதிகம்: பிரபல இயக்குனர் பேட்டி

  • IndiaGlitz, [Sunday,July 14 2019]

அரசியல் களத்தில் கமல்ஹாசனை விட ரஜினிகாந்துக்கு மக்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என பிரபல இயக்குனர் அமீர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த இயக்குனர் அமீர், 'கமல்ஹாசனை விட ரஜினிகாந்துக்கு அரசியல் களத்தில் ஆதரவு அதிகம் என்றும், ஆனாலும் அந்த ஆதரவு ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு இருக்குமா? என்பது சந்தேகமே என்றும் தெரிவித்தார். அதே நேரத்தில் பாஜக ஆதரவு நிலையை ரஜினிகாந்த் தொடர்ந்தால் அவருடைய வாக்கு சதவீதம் குறையும்' என்றும் தெரிவித்தார்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் இருந்து தமிழக மக்கள் எப்போதுமே பாஜகவுக்கு எதிரானவர்கள் என்பதை ரஜினிகாந்த் புரிந்து கொண்டிருப்பார் என்றும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும்போது ஆதரவும் எதிர்ப்பும் அதிகம் இருக்கும் என்றும் அமீர் தெரிவித்தார்.

மேலும் கமல்ஹாசனை பாஜகவின் 'பி' டீம் என தனக்கே கூட சந்தேகம் இருந்ததாகவும், ஆனால் அவரிடம் நேரில் பேசி அவருடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்ட பின்னர் பாஜகவை கமல்ஹாசன் கடுமையாக எதிர்ப்பதை புரிந்து கொண்டதாகவும் அமீர் அந்த பேட்டியில் கூறினார்.
 

More News

மீரா-தர்ஷன் புரபோஸ் விவகாரம்: கவின் உதவ கமல் வேண்டுகோள்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவே ஜாலியாகவும் ரசிக்கும்படியாக இருப்பதால் இன்றைய நிகழ்ச்சியும் கலகலப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

வனிதா வெளியேறுகிறாரா? பிக்பாஸ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

பிக்பாஸ் முதல் பாகத்தில் ஜூலி, பிக்பாஸ் இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா தத்தா, தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் மூன்றாம் பாகத்தில் வனிதா ஆகியோர் குறைந்த நாட்களிலேயே

வந்தார்னா டார் டாரா கிழிப்பாரு: கமல் முன்னிலையில் வனிதாவை கலாய்த்த சாண்டி

பிக்பாஸ் வீட்டின் சொர்ணாக்காவாக வலம் வந்து கொண்டிருக்கும் வனிதாவிடம் எல்லோருக்குமே ஒருவித பயம் உள்ளது. ஏன் பிக்பாஸூக்கே பயம் இருக்கும்போல் தெரிகிறது

சமந்தாவின் 'ஓபேபி' ரீமேக்கில் பிரபல நடிகை!

சமந்தாவின் 'ஓபேபி' திரைப்படம் சமீபத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தாவின் நடிப்புக்கு விமர்சகர்கள் மற்றும் ஊடகங்கள் பெரும்

வனிதாவை தரமான சம்பவம் செய்த கமல்ஹாசன்

பிக்பாஸ் வீட்டில் ஓங்கி ஒலிக்கும் ஒரே குரல் என்றால் அது வனிதாவின் குரலாகத்தான் உள்ளது.