முதல்வரை நேரில் சந்தித்து நிதி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கு தமிழக மக்கள். தொழிலதிபர்கள். திரை உலக பிரபலங்கள் தாராளமாக நிதி உதவி செய்து வருகின்றனர்

குறிப்பாக திரையுலகை பொருத்தவரை சிவகுமார் குடும்பத்தினர் ஒரு கோடி, ரஜினி மகள் குடும்பத்தினர் ஒரு கோடி, ஏஆர் முருகதாஸ் 25 லட்சம், தல அஜித் 25 லட்சம், ஷங்கர் 10 லட்சம் என பலர் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ரூபாய் 50 லட்சம் நிதி உதவி செய்துள்ளார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனது பங்களிப்பை ரஜினிகாந்த் வழங்கியதை அடுத்து அவரது ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர் 

முதல்வரிடம் நிதியளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ’தமிழக அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் தான் கொரோனாவை ஒழிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

பயணம் செய்பவர்களுக்கு இன்று முதல் இ- பதிவு அவசியம் - எப்படி விண்ணப்பிப்பது...?

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு முறை இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரெம்டெசிவர்  விற்பனைக்கு  புதிய 'போர்ட்டல்'.....! அதிரடி  காட்டும் அரசு...!

ரெம்டெசிவர் மருந்திற்கு தட்டுப்பாடு இருப்பதால், தனியார் மருத்துவமனைகளுக்கு  நேரடியாக விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.

தந்தையை இழந்த சிறுமி....செய்த நெகிழ்ச்சி காரியம்...! அந்த மனசு தான் சார் கடவுள்...!

தனது தந்தையை இழந்த சிறுமி செய்த நெகிழ்ச்சியான செயல், பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

ஒரு நிமிஷத்தில் 11 மாடி கட்டிடம் இடிப்பு… காஸாவில் கணக்கே இல்லாமல் தொடரும் உயிரிழப்பு!

கடந்த மே 10 ஆம் தேதி முதல் பாலஸ்தீனர்கள் அதிகம் வசிக்கும் ஜெருசலேம் தலைநகர் காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் இயக்கத்திற்கும் இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது

குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்?

குஜராத் மாநிலம் தெற்கு ராஜ்கோட் பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.