கையில் அரிவாளுடன் கம்பீரமாக 'அண்ணாத்த': புதிய போஸ்டர்!

  • IndiaGlitz, [Thursday,September 09 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்றும் மோஷன் போஸ்டர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் இன்று காலை அறிவித்து இருந்தது என்பதை பார்த்தோம்

இதனை அடுத்து ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை எதிர்பார்த்து ரஜினியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த நிலையில் இன்று காலை வெளியான அறிவிப்பில் அட்டகாசமான ரஜினிகாந்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது என்பதும் அந்த போஸ்டர் இணையதளங்களில், சமூக வலைதளங்களில் டிரெண்டானது என்றும் தெரிந்தது. இந்த நிலையில் சற்று முன் ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது

இந்த போஸ்டரில் ரஜினிகாந்த் தனது கையில் கம்பீரமாக அரிவாளை கையில் வைத்திருப்பது போல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஃபஸ்ட் லுக் போஸ்டருக்கு முந்தைய போஸ்டரான இந்த போஸ்டரே படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.