close
Choose your channels

மோடி பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த்! 

Monday, May 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக மீண்டும் அபார வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாவது முறையாக பிரதமர் பதவியை நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்கவுள்ளார். வரும் 30ஆம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் பிரதமரின் பதவியேற்பு விழாவில் நாடு முழுவதிலும் இருந்து பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் செய்தி வெளிவந்துள்ளது. தேர்தல் முடிவு வெளிவந்து கொண்டிருந்தபோதே பிரதமர் மோடிக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

'தர்பார்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக இன்று மும்பை செல்லும் ரஜினிகாந்த், அங்கிருந்து டெல்லி சென்று மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.