close
Choose your channels

முத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர்: விஜய் சேதுபதிக்கு இரண்டாவது இடம்தான் 

Sunday, August 9, 2020 • தமிழ் Comments

800 விக்கெட்டுகள் எடுத்து சாதனை செய்த இலங்கை கிரிக்கெட் அணியின் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் தமிழில் உருவாக உள்ளது என்பது தெரிந்ததே. இதில் முத்தையா முரளிதரன் கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்திற்கு ’800’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஸ்வின் அவர்களும் முத்தையா முரளிதரன் அவர்களும் பேசிய உரையாடல் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இந்த உரையாடலில் முத்தையா முரளிதரனுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்? என்ற கேள்விக்கு பதிலளித்த முரளிதரன் ’ரஜினிகாந்த்’ என்றும் அவர் நடித்த ’சிவாஜி’ திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்த படம் என்றும் கூறியுள்ளார். ரஜினியை அடுத்து வேறு எந்த நடிகர் பிடிக்கும் என்று கேட்டதற்கு விஜய் சேதுபதியை பிடிக்கும் என்றும் அவர் நடித்த ‘விக்ரம் வேதா’ படம் தனக்கு பிடித்த படங்களில் ஒன்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை ராணாவின் சுரேஷ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ஸ்ரீபதி என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே ’கனிமொழி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz