'காவாலா' பாட்டுல ரஜினியே கிடையாதா? ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த 'ஜெயிலர்' பிரபலம்..!

  • IndiaGlitz, [Tuesday,July 11 2023]

’காவாலா’ படத்தில் தமன்னாவுக்கு மட்டும் பாட்டு எழுத வேண்டும் என்று என்னிடம் இயக்குனர் கூறியதாகவும் ரஜினி இந்த பாடலில் இருப்பதையே தன்னிடம் கூறவில்லை என்றும் இந்த பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் தமன்னா கிளாமர் நடனத்தில் அசத்தியிருந்தார் என்பதும் இந்த பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாடலின் இறுதி காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலாக தோன்றியது ரஜினி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த இந்த பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் ’தன்னிடம் பாட்டு எழுத கூறும் போது தமன்னாவுக்கு மட்டும் பாட்டு எழுத வேண்டும் என்று கூறியதாகவும், ரஜினிகாந்த் இந்த பாடலில் தோன்றியது குறித்து என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறினார். இந்த பாடலை பார்த்தபோதுதான் எனக்கே ஆச்சரியமாக இருந்தது என்றும் ரஜினிகாந்த் எப்படி இந்த பாடலில் வந்தார் என்று எனக்கே தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

ஒரே படத்தில் இணைகிறார்களா கமல் - அஜித் - சூர்யா..? கெளதம் மேனன் யுனிவர்சல் படம்?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'வேட்டையாடு விளையாடு' என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது சமீபத்தில் கூட இந்த படம் மீண்டும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை

இது புது டிரெண்டா? நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாட் புகைப்படம் வெளியிட்ட நடிகை லட்சுமி ராய்!

தென்னிந்திய சினிமாவில் கவர்ச்சிகாக ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றிருந்த நடிகையான லட்சுமி ராய் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்துவரும் நிலையில்

சினிமாவில் இருந்து விலகுகிறாரா விஜய்? விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகி கொடுத்த அதிரடி தகவல்..!

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தளபதி 68' படத்தில் நடித்து முடித்தவுடன் மூன்று ஆண்டுகள் சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் அவர் முழுக்க முழுக்க அரசியலில் களம் இறங்க போவதாகவும் ஏற்கனவே செய்திகள்

சிங்கம் படம் பார்த்தியா? நம்ம சிவகுமார் பையன் சூர்யா நடிச்சது.. 'சத்திய சோதனை' டிரைலர்..!

 'ஒரு கிடாயின் கருணை மனு' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் சங்கையா' இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'சத்திய சோதனை'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள்

காட்டன் புடவை கட்டி அசல் பெண் போலவே இருக்கும்… AI- செயற்கை செய்தி வாசிப்பாளர்கள்?

AI- தொழில்நுட்பத்தால் உண்டான செயற்கை நுண்ணறிவு குறித்த செய்திகளை அடிக்கடி ஊடகங்களில் பார்த்து வருகிறோம்.