மலேசிய ரசிகர்களுக்கு மீண்டும் இன்ப அதிர்ச்சி தரும் ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், அடுத்த கட்ட படப்பிடிப்பு மலேசியாவிலும் நடந்தது.
மலேசிய படப்பிடிப்பின்போது அரசு உயர் பதவியில் இருந்தவர் முதல் சாதாரண குடிமகன் வரை ரஜினிக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். ரஜினியின் 'கபாலி' படப்பிடிப்பு மலேசிய ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்த நிலையில் மீண்டும் மலேசிய ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது 'கபாலி' படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் நடத்த படக்குழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை எனினும் இந்த படத்தின் இசைவெளியீடு மலேசியாவில் நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.