கபாலி ரிலீஸ் எப்போது? பா.ரஞ்சித் பேட்டி

  • IndiaGlitz, [Saturday,March 26 2016]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தற்போது எடிட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

கபாலி' படத்தினை மே இறுதி வாரத்தில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் ரிலீஸ் செய்ய அனைத்து பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளோம். இன்னும் மூன்று அல்லது நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது. தற்போது எடிட்டிங் பணிகள் சென்று கொண்டிருக்கிறது. எடிட்டிங் முடிந்ததும் டப்பிங் பணி தொடங்கும். அதன்பின்னர் டீஸர் மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதிகள் குறித்த அறிவிப்பு வெளிவரும்' என்று கூறியுள்ளார்.
மேலும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு ரஜினிகாந்த் அவர்களின் முழு ஒத்துழைப்பால் திட்டமிட்ட காலத்திற்கு முன்பே முடிக்கப்பட்டதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பின்போதே தாங்கள் புதுவித அனுபவத்தை பெற்றதாகவும், அதே அனுபவத்தை நிச்சயம் திரையில் பார்க்கும் ரசிகர்களும் அனுபவிப்பார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் ரஞ்சித் தெரிவித்தார்.

More News

விஷாலின் 'மருது' ரிலீஸ் எப்போது?

விஷால் நடிப்பில் 'கொம்பன்' இயக்குனர் முத்தையா இயக்கிய 'மருது' திரைப்படம் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து...

'தெறி'யுடன் கனெக்ஷன் ஆன சிவகார்த்திகேயனின் 'ரெமோ'

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' திரைப்படத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள் சமீபத்தில் ரிலீஸ் ஆகியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

தனுஷின் 'தொடரி' ரிலீஸ் தேதி

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'தொடரி' என்ற படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நேற்று முன் தினம் வெளியாகி தனுஷ்...

விஷாலுக்கு தஞ்சை விவசாயிகள் அனுப்பிய பார்சல்

சமீபத்தில் விவசாயி பாலன் என்பவர் பெற்ற வங்கி கடனுக்காக அவருடைய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டதோடு, அவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

'தெறி'க்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...