பாரீஸ் நகரில் 'கபாலி' செய்த மிகப்பெரிய சாதனை

  • IndiaGlitz, [Saturday,June 25 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் இரண்டு டீசர்கள், மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி பல உலக சாதனைகளை நிகழ்த்திவிட்டது. ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படம் தற்போது இன்னொரு சாதனையை நிகழ்த்தியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் 'Rex Cinema' என்ற திரையரங்கில் ரஜினியின் 'கபாலி' ரிலீஸ் ஆகவுள்ளது. ஒரே நேரத்தில் 2000 பார்வையாளர்கள் உட்கார்ந்து படம் பார்க்கும் அளவுக்கு பிரமாண்டமான திரையரங்கம் ஆகும். மேலும் ஐரோப்பிய கண்டத்திலேயே இந்த திரையரங்கம்தான் மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. உலகப்புகழ் பெற்ற படங்கள், ஹாலிவுட் படங்கள் மட்டுமே இந்த திரையரங்கில் வெளியாகி வரும் நிலையில் இந்த திரையரங்கில் வெளியாகும் முதல் இந்திய திரைப்படம் 'கபாலி'தான் என்பது நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டிய விஷயம் ஆகும்.

இந்த திரையரங்கின் முன்புறம் இப்போதே ரஜினியின் மிகப்பெரிய கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரிலீசுக்கு முன்பே பல சாதனைகளை செய்து வரும் ரஜினியின் 'கபாலி' ரிலீசுக்கு பின்னர் என்னென்ன சாதனைகளை செய்யவுள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

9ஐ அடுத்து 95. சிம்பு-ஆதிக் படத்தின் ஆச்சர்யம்

சிம்பு நடிப்பில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்ற பெரிய பட்ஜெட் படம்...

ஆடிக்கு முந்துகிறது அஜித் படம்

தல அஜித் நடிக்கவுள்ள 'அஜித் 57' படத்தின் படப்பிடிப்பு எப்போது என்று அனைவரும் எதிர்பார்த்திருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு...

ஏ.ஆர்.முருகதாசுடன் இணையும் விக்ரம்பிரபு

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் வாரிசான விக்ரம்பிரபு கும்கி' முதல் 'இது என்ன மாயம்' வரையிலான படங்களில் நடித்து வளர்ந்து வரும்...

சுந்தர் சி - ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் படத்தின் நாயகி இவரா?

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 படம் மிகப்பிரமாண்டமாகவும், எந்திரன், '2.0' மற்றும் பாகுபலி'யை விட அதிக பொருட்செலவில் தயாரிக்கப்படவுள்ளதாகவும்...

மலேசிய அரசின் சிறப்பு அனுமதியை பெற்றது விக்ரமின் 'இருமுகன்'

சீயான் விக்ரம் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இன்னும் ஒருசில வாரங்களில்...