பாரதிராஜாவுக்காக மீண்டும் இணையும் கமல்-ரஜினி

  • IndiaGlitz, [Tuesday,April 11 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர்களுக்கு இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் ஒரு குரு என்றால் இவர்களுக்கு இன்னொரு குருவாக திகழ்ந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா,. மூவரும் இணைந்து உருவாக்கிய '16 வயதினிலேயே' திரைப்படம் தமிழ்த்திரையுலகில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் பாரதிராஜா, கமல்-ரஜினி இருவரையும் தனித்தனியாகவும் இயக்கி வெற்றி படங்களை கொடுத்துள்ளார்

இந்த நிலையில் பாரதிராஜா தற்போது திரைப்பட கல்லூரி ஒன்றை தொடங்கவிருக்கின்றார். இந்த கல்லூரியின் திறப்பு விழாவில் ரஜினி-கமல் ஆகிய இருவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிராஜா இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சினிமா' என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்த திரைப்பட கல்லூரியில் நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், தயாரிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை அளிக்கப்படவுள்ளது.

மேலும் பாரதிராஜாவின் திரைக் கல்லூரியில், இயக்குநர்கள் மகேந்திரன், மணிரத்னம், பிரியதர்ஷன், ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், சுஹாசினி, ராதா, ராதிகா, மனோபாலா உள்ளிட்டோரும் கௌரவ ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

பாலுமகேந்திராவின் 'சினிமா பட்டறை' அவர் மறைந்த பின்னர் சரியாக செயல்படாத நிலையில் இந்த கல்லூரி, புதியதாக திரைத்துறையில் நுழைபவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

விளம்பரத்தில் நடிப்பது மக்களுக்கு செய்யும் துரோகம். ராஜ்கிரண்

திரையுலகில் நடித்து கொண்டிருக்கும் பெரும்பாலான பிரபலங்கள் விளம்பரப்படத்திலும் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர்.

வடபழனி கோவிலில் பிச்சை எடுக்கும் ஜெயலலிதாவுடன் நடித்த நடிகை

கனவுத்தொழிற்சாலையான திரையுலகில் பகட்டான வாழ்க்கை, பலகோடி சொத்துக்களுடன் வாழும் நட்சத்திரங்கள் ஒருசிலர் இருந்தாலும், இதே திரையுலகில்தான் ஒருவேளை சோற்றுக்கே கஷ்டப்படும் தொழிலாளர்களும் உள்ளனர்

டெல்லியில் மண்சோறு சாப்பிட்ட பிரேமலதா விஜயகாந்த்

தமிழக விவசாயிகள் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக டெல்லியில் வங்கிக்கடன் தள்ளுபடி உள்பட பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வருகின்றனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாளை நடைபெறவிருந்த ஆர்.கே.நகர் தேர்தல் அதிகளவிலான பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

ரம்யாகிருஷ்ணனிடம் ராஜமெளலி மன்னிப்பு கேட்டது ஏன்?

'பாகுபலி' என்ற ஒரே படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றுவிட்ட பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய திரைப்படமான 'பாகுபலி 2' படத்தை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது. ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள இந்த படத்தில் சிவகாமி என்ற கேரக்டரில் மிக அற்புதமாக நடித்த ரம்யா கிருஷ்ணனிடம் இயக்குனர் ராஜமெளல&