விருது பெற்றது மகிழ்ச்சி, ஆனால் ரொம்ப வருத்தம்: டெல்லி கிளம்பும் முன் ரஜினி பேட்டி!

  • IndiaGlitz, [Sunday,October 24 2021]

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த விருதைப் பெறுவதற்காக ரஜினிகாந்த் இன்று டெல்லி செல்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு திரை உலகின் மிகப்பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. இந்த விருது நாளை டெல்லியில் நடைபெறும் விழாவில் ரஜினிகாந்த் அவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் வழங்க உள்ளார்.

இந்த நிலையில் இந்த விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் இன்று டெல்லி கிளம்பினார். அதற்கு முன்னதாக போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ’மிக உயரிய இந்த விருதைப் பெறுவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இந்த விருது தனக்கு கிடைக்கும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் இந்த உயரிய விருதை பெறும் நேரத்தில் கே பாலச்சந்தர் அவர்கள் இல்லை என்பது தனக்கு மிகவும் வருத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் டெல்லி சென்று விருதை வாங்கிவிட்டு சென்னை திரும்பியவுடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்றும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

More News

பிக்பாஸ் சீசன் 5: இன்று காப்பாற்றப்பட்ட போட்டியாளர் இவர் தான்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் அனல் பறந்தது என்பதும் குறிப்பாக பிரியங்கா மற்றும் அபிஷேக் ஆகிய இருவரையும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கமல்ஹாசன் வறுத்தெடுத்தது

பிக்பாஸ் எவிக்சன்: மக்களின் விருப்பத்திற்குரிய போட்டியாளர் வெளியேற்றம்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பிரியங்கா, பாவனி ரெட்டி, அக்ஷரா, தாமரைச்செல்வி, இசைவாணி, ஐக்கி பெர்ரி, அபினய், சின்ன பொண்ணு மற்றும் அபிஷேக் ராஜா ஆகிய ஒன்பது போட்டியாளர்கள்

கமல்ஹாசனிடமே ரீல் விடும் அபிஷேக்: நமட்டு சிரிப்புடன் இன்றைய அடுத்த புரமோ!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய அபிஷேக் பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை பெற்று உள்ளார் என்பதும் அவர் எப்போது வெளியே போவார் என்பதே பெரும்பாலான ரசிகர்களின்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'அண்ணாத்த' படத்தின் 'வா சாமி' பாடல் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், இமான் இசையில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிவரும் 'அண்ணாத்த' திரைப்படம் வரும் தீபாவளி அன்று

'வலியை தாங்கிகிட்டவன் தான் ஜெயிக்க முடியும்: 'எனிமி' டிரைலர்

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எனிமி' என்ற திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரைக்கு வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர்