தெலுங்கு திரையுலகை வறுத்தெடுத்த ரஜினி பட நாயகி.. அப்படி என்ன சொன்னார்?

  • IndiaGlitz, [Friday,February 16 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை, தெலுங்கு திரையுலகை வறுத்து எடுத்து அளித்துள்ள பேட்டியின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’கபாலி’ திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே. இவர் அவ்வப்போது தரும் பேட்டியில் சில தைரியமான கருத்துக்களை வெளிப்படுத்துவார் என்பதும், குறிப்பாக அவரது கருத்தில் சமூக அக்கறை, பெண்களின் பாதுகாப்பு குறித்து கண்டிப்பாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் தெலுங்கு திரையுலகை வறுத்தெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கு திரையுலகம் ஆணாதிக்கம் நிறைந்த ஒன்று, பெண்களை அவர்கள் நடத்தும் இடம் சிறிதும் சகித்துக் கொள்ள முடியாது என்று கூறிய அவர், பெண்களுக்கு வழங்கும் கேரக்டர்களும் மிகவும் கொடுமையாக இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

மேலும் அங்கு நடிகர்கள் நடந்து கொள்ளும் விதமும் எனக்கு சுத்தமாக பிடிக்காது, படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது திடீரென நடிகர்கள் மூட் சரியில்லை என்று கூறி சென்று விடுவார்கள், ஆனால் படக்குழுவினர் அந்த நடிகர்களை ஒன்றுமே சொல்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்து விடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

நான் தெலுங்கு படங்களில் நடிக்கும் போது மிகவும் கஷ்டப்பட்டேன், அதன் பிறகு ஒரு கட்டத்தில் தெலுங்கு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டேன் என்றும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

More News

'தலைவர் 171' படத்தில் ரஜினிக்கு வில்லன் யார்? வேற லெவலில் யோசிக்கும் லோகேஷ் கனகராஜ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' திரைப்படத்தின் கதையில் வில்லன் கேரக்டர் வலிமையானது என்பதால் அந்த கேரக்டரில் நடிக்க பிரபல நடிகரை லோகேஷ் கனகராஜ் வேற லெவலில் யோசித்து

சிம்பு இதுவரை நடிக்காத கேரக்டர்.. 'எஸ்டிஆர் 48' படத்தின் சூப்பர் அப்டேட்..!

சிம்புவின் அடுத்த படமான 'எஸ்டிஆர் 48' திரைப்படத்தில் அவர் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அதில் ஒரு வேடம் அவர் இதுவரை நடிக்காத கேரக்டர் என்ற ஆச்சரிய தகவல்கள் தற்போது

லோகேஷ் கனகராஜ் செய்தது ரொம்ப தப்பு.. டப்பிங் யூனியன் நிர்வாகி அதிர்ச்சி தகவல்..!

டப்பிங் யூனியனில் உறுப்பினராக இல்லாத ஒருவரை டப்பிங் பேச வைத்தது லோகேஷ் கனகராஜ் செய்த தவறு என டப்பிங் யூனியன் நிர்வாகி ராஜேந்திரன் என்பவர் பேட்டி அளித்துள்ளார்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமாகிறது அசோக் செல்வனின் சூப்பர்ஹிட் திரைப்படம்..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  ரசிகர்களுக்காக பிரத்தியேகமாக, பல புதிய தமிழ் சூப்பர் ஹிட் திரைப்படங்களை  ஸ்ட்ரீம் செய்து வருகிறது.

அவர் கூப்பிட வேண்டிய அவசியமே இல்லை, நானே போயிருவேன்: விஜய் அரசியல் கட்சி குறித்து இயக்குனர்..!

விஜய் அழைத்தால் அவருடைய கட்சியில் இணைவீர்களா என்று பிரபல இயக்குனரிடம் செய்தியாளர்களுக்கு கேட்டபோது 'நல்ல விஷயத்துக்கு அவர் கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை, நானே போயிடுவேன்' என்று பதில் அளித்துள்ளார்.