close
Choose your channels

டெல்லியில் அரசியல் சந்திப்பா? ரஜினி தரப்பு மறுப்பு

Sunday, September 9, 2018 • தமிழ் Comments

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் 'பேட்ட' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு உத்தரபிரதேச மாநிலத்தில் தற்போது நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் சமீபத்தில் உபி சென்றார்.

இந்த நிலையில் உபி செல்லும் வழியில் ரஜினிகாந்த் ஒரு முக்கிய அரசியல் தலைவரை ரகசியமாக சந்தித்ததாக சமூகவலைத்தளங்களில் வதந்தி பரவி வருகிறது. இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் அளிக்கபட்டுள்ளது.

இந்த விளக்கத்தில் 'ரஜினிகாந்த் படப்பிடிப்பு பணிகளுக்காக மட்டுமே டெல்லி வழியாக லக்னோ சென்றார். டெல்லியில் எந்தவிதமான அரசியல் நிகழ்வும் நடைபெறவில்லை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.