கபாலி டைட்டில் பிரச்சனையை சுமூகமாக தீர்ப்போம். தாணு

  • IndiaGlitz, [Wednesday,August 19 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் டைட்டில் 'கபாலி' என இயக்குனர் ரஞ்சித் அறிவித்த சில மணி நேரங்களில் இதே பெயரில் ஒரு படம் ஏற்கனவே தயாராகி வருவதாகவும், சிவகுமார் என்பவர் தயாரித்து நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு 90% வரை முடிந்துவிட்டதாகவும் இணையதளங்களில் செய்திகள் வெளிவந்தது.


இந்நிலையில் 'கபாலி' படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து கூறியபோது, "நாங்கள் 'கபாலி' டைட்டிலை அறிவிப்பதற்கு முன்னர் தயாரிப்பாளர் கவுன்சில், தயாரிப்பாளர் கில்டு மற்றும் பிலிம் சேம்பர் ஆகியவற்றில் இந்த டைட்டிலை வேறு யாரேனும் பதிவு செய்துள்ளார்களா? என்பதை சோதனை செய்து அதன்பின்னர் முறைப்படி இந்த டைட்டிலை பதிவு செய்தோம். இருப்பினும் இதே பெயரில் ஒரு படம் ஏற்கனவே தயாராகி கொண்டிருப்பது குறித்து அறிந்தவுடன் அந்த படத்தின் தயாரிப்பாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் இந்த பிரச்சனைக்கு சுமூக முடிவை காண்போம்' என்று கூறியுள்ளார்.

ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ், மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தமாதம் செப்டம்பரில் தொடங்கவுள்ளது.

More News

'விஜய் 59' படத்தின் டைட்டில்?

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'புலி' படத்தின் ரிலீஸை அவரது ரசிகர்கள் உள்பட அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும்...

நயன்தாரா திருமணத்தை நானே நடத்தி வைப்பேன். சிம்பு அதிரடி பதில்

பலவிதமான தடைகளை கடந்த வெள்ளியன்று வெளியாகி வெற்றிகரமாக தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் சிம்புவின் 'வாலு' சக்சஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்பு, இயக்குனர் விஜய் சந்தர் உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

மீண்டும் திரையில் கார்த்திக்-ஜெஸ்ஸி. கவுதம் மேனன் தகவல்

சிம்பு, த்ரிஷா நடிப்பில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாரிக்கும் எண்ணம்...

ஆர்யாவை மீண்டும் துன்புறுத்த விரும்பவில்லை. பாலா

பிரபல இயக்குனர் பாலாவுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு தேசிய விருது வாங்கிக் கொடுத்த திரைப்படம் 'நான் கடவுள்'...

பாங்காக் வெடிகுண்டு சம்பவம். நூலிழையில் உயிர் பிழைத்த பிரபல நடிகை

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் நேற்று இரவு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் உடல் சிதறி 27 பேர் பலியான செய்தி அனைவரையும் உலுக்கியுள்ள நிலையில்...