close
Choose your channels

கமல்ஹாசனுடன் அரசியல் கூட்டணி குறித்து ரஜினிகாந்த்

Wednesday, January 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் இரண்டு பெரிய நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் தமிழக அரசியல் களத்தில் குதித்துள்ளனர். வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துவிட்டு அரசியல் சுற்றுப்பயணத்தை தனது சொந்த ஊரான இராமநாதபுரத்தில் இருந்து தொடங்கவுள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். அதேபோல் ரஜினியும் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துவிட்டு கட்சியை தொடங்கும் ஆரம்பகட்ட பணியில் உள்ளார்.

இந்த நிலையில் திரையுலகில் நாற்பது ஆண்டுகால நண்பர்களாக இருக்கும் கமல்ஹாசன், ரஜினிகாந்த், அரசியலில் கூட்டணி அமைப்பார்களா? என்ற கேள்வி இருதரப்பு ரசிகர்களிடமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் இன்று போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், 'கமல்ஹாசன் தொடங்கவிருக்கும் அரசியல் கட்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார். மேலும் கமல்ஹாசனுடன் இணைந்து அரசியலில் செயல்படுவீர்களா? என்ற கேள்விக்கு 'அதற்கு காலம் தான் பதில் சொல்லும்' என்று கூறினார்.

மேலும் தற்போதைய அரசியல் பிரமுகர்கள் ஓரளவுக்கே எம்ஜிஆரின் கொள்கைகளை பின்பற்றுவதாகவும், ஆறு மாதத்தில் தேர்தல் வந்தால் கூட அதனை சந்திக்க தான் தயார் என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.