5 மாநில தேர்தல்: பாஜக பின்னடைவு குறித்து ரஜினி கருத்து

  • IndiaGlitz, [Tuesday,December 11 2018]

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, மிசோரம் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டது. இதில் பாஜக ஒரு மாநிலத்தில் கூட ஆட்சியை பிடிக்கவில்லை. அதுமட்டுமின்றி ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் இழந்துள்ளது.

இந்த நிலையில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களிடம் கருத்து கூறியபோது, '5 மாநில தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, பாஜக செல்வாக்கை இழந்ததை காட்டுகிறது என்றும், 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு என்றும் கூறியுள்ளார்.

மோடியை ஒரு வலிமையான தலைவர் என்று ரஜினிகாந்த் முந்தைய பேட்டியில் கூறியிருந்த நிலையில் இன்றைய பேட்டியில் பாஜகவுக்கு இதுவொரு பெரிய பின்னடைவு என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ரஜினி பிறந்த நாளில் படக்குழுவினர் தரும் விருந்து இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக அவரது ரசிகர்களுக்கு வெளிவரவுள்ள நிலையில் நாளை வழக்கம்போல் ரஜினி பிறந்த நாளை கொண்டாடவும் ரசிகர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

அஜித்தின் 'விஸ்வாசம்' இன்றைய புதிய அப்டேட்

அஜித் நடித்த 'விஸ்வாசம் திரைப்படத்தின் புதிய அப்டேட்டாக நேற்று இரவு 'அடிச்சு தூக்கு' என்ற பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவியிருப்பது

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே துணை' புதிய அப்டேட்

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து இயக்கிய 'மீசையை முறுக்கு' திரைப்படத்தின் வெற்றிக்கு பின் அவர் நடித்து இசையமைத்து வரும் திரைப்படம்' 'நட்பே துணை'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது

யோகிபாபுவுடன் நடனமாடும் பிரபல நடிகை

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ள படம் 'தர்ம பிரபு'...

'96' ஜானு கேரக்டரில் அஜித் பட நாயகி

விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த '96' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் ஒன்று என்பதில் மாற்றுக்கருத்து யாருக்கும் இருக்க முடியாது.