close
Choose your channels

ரஜினி - விஜய் இடையே சம்பள போட்டி.. 'தலைவர் 171' படத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவா?

Thursday, April 11, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அஜித் - விஜய் என்ற போட்டி இருந்த நிலையில் தற்போது விஜய் ஒரு படி மேலே போய் ரஜினியுடன் போட்டி போடும் அளவிற்கு சென்றுவிட்டார் என்றும் இன்னும் சொல்ல போனால் ரஜினியை விட அவர் சம்பள விஷயத்தில் மிஞ்சி விட்டார் என்றும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ’கோட்’ திரைப்படத்திற்காக 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் அடுத்ததாக நடிக்க இருக்கும் ’தளபதி 69’ படத்திற்காக 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீப காலமாக ரஜினி விஜய் இடையே தான் போட்டி என்ற நிலையில் ’ஜெயிலர்’ படத்திற்காக 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ரஜினி ’தற்போது தலைவர் 171’ படத்திற்காக 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்க போவதாக கூறப்படுகிறது.

’ஜெயிலர்’ படத்தில் ஏற்கனவே மிகப்பெரிய லாபம் பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி கேட்கும் சம்பளத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ’தளபதி 69’ படத்தில் விஜய் 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் கிட்டத்தட்ட அதை ரஜினியும் நெருங்கி விட்டதாகவே கூறப்படுவது சம்பள விஷயத்தில் இருவரும் மாறி மாறி போட்டி போடுகிறார்கள் என்பது தெரிய வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் விஜய் ’தளபதி 69’ படத்துடன் திரையுலகில் இருந்து விலக இருப்பதாக கூறப்படும் நிலையில் ரஜினியின் சம்பளம் அடுத்தடுத்த படங்களில் எப்படி போகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment