ரஜினி - விஜய் இடையே சம்பள போட்டி.. 'தலைவர் 171' படத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவா?

  • IndiaGlitz, [Thursday,April 11 2024]

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அஜித் - விஜய் என்ற போட்டி இருந்த நிலையில் தற்போது விஜய் ஒரு படி மேலே போய் ரஜினியுடன் போட்டி போடும் அளவிற்கு சென்றுவிட்டார் என்றும் இன்னும் சொல்ல போனால் ரஜினியை விட அவர் சம்பள விஷயத்தில் மிஞ்சி விட்டார் என்றும் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தற்போது விஜய் நடித்துக் கொண்டிருக்கும் ’கோட்’ திரைப்படத்திற்காக 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாகவும் அடுத்ததாக நடிக்க இருக்கும் ’தளபதி 69’ படத்திற்காக 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீப காலமாக ரஜினி விஜய் இடையே தான் போட்டி என்ற நிலையில் ’ஜெயிலர்’ படத்திற்காக 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய ரஜினி ’தற்போது தலைவர் 171’ படத்திற்காக 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்க போவதாக கூறப்படுகிறது.

’ஜெயிலர்’ படத்தில் ஏற்கனவே மிகப்பெரிய லாபம் பார்த்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினி கேட்கும் சம்பளத்தை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ’தளபதி 69’ படத்தில் விஜய் 250 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்றால் கிட்டத்தட்ட அதை ரஜினியும் நெருங்கி விட்டதாகவே கூறப்படுவது சம்பள விஷயத்தில் இருவரும் மாறி மாறி போட்டி போடுகிறார்கள் என்பது தெரிய வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் விஜய் ’தளபதி 69’ படத்துடன் திரையுலகில் இருந்து விலக இருப்பதாக கூறப்படும் நிலையில் ரஜினியின் சம்பளம் அடுத்தடுத்த படங்களில் எப்படி போகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

என்னங்கடா செய்றீங்க.. விஜய் டிவி சீரியலில் குளியல் காட்சி.. விரைவில் சென்சார் வந்துவிடுமோ?

ஏற்கனவே இந்தி உட்பட பிற மொழி சீரியல்களில் படுக்கை அறை காட்சிகள், லிப்கிஸ் காட்சிகள் உட்பட குடும்பத்துடன் பார்க்க முடியாத காட்சிகள் இருப்பதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் தற்போது

'குக் வித் கோமாளி' சீசன் 5.. முதல் எபிசோடு படப்பிடிப்பு.. விஷால் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள 'குக் வித் கோமாளி' சீசன் 5 நிகழ்ச்சி விரைவில் ஆரம்பமாக உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோடு படப்பிடிப்பு சமீபத்தில் நடந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது.

தங்க கோவில் முன் தகதகவென ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை ரம்யா பாண்டியன் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பொற்கோவில் முன் தங்கம் போல் தகதகவென ஜொலிக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில்

நீ நேர்ல தாண்டா ஒரு மாதிரி இருக்க.. கேமிராவுல சூப்பரா இருக்க.. பிரதீப் ரங்கநாதன் அடுத்த பட அறிவிப்பு..!

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் என்பதும் இந்த நிறுவனம் ஏராளமான வெற்றி படங்களை தயாரித்துள்ளது என்பது தெரிந்தது.

எனக்கே தெரியாமல் செய்த இந்த விஷயம் ஹார்ட் பிரேக்கிங் ஆக இருந்தது நடிகை வைஷு விளக்கம்.

நிறைய இடங்களில் நான் நடித்த காட்சிகளை கட் செய்து விட்டார்கள்.அது மிகவும் ஹார்ட் பிரேக்கிங் ஆக இருந்தது.மனம் வருத்தப்பட்டேன்...