பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகளை துவம்சம் செய்தது இந்திய ராணுவம்: ரஜினிகாந்த்


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில நாட்களாக இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் நடந்து வந்த நிலையில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அந்நாட்டில் இருந்த தீவிரவாதிகள் முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவத்திற்கு எனது பாராட்டுக்கள் என சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் உள்ளார்.
கடந்த மாதம் 22ஆம் தேதி பகல்ஹாம் என்ற பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்களை அழித்தது. இதனை அடுத்து இரு நாடுகளும் தற்போது சமாதான பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த போர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து அங்கிருந்த தீவிரவாதிகளின் முகாம்களை அழித்து துவம்சம் செய்த இந்திய ராணுவத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.
மேலும், இந்த போரை மிக திறமையாக, வலிமையாக வீரியத்தோடு கையாண்டு கொண்டிருக்கும் நம் பாரத பிரதமர் மோடி அவர்களுக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு, பாதுகாப்பு துறை ராஜ்நாத் சிங் அவர்களுக்கும், முப்படை அதிகாரிகளுக்கு, முப்படை வீரர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என்று தெரிவித்தார்.
#Watch | "இந்திய முப்படை வீரர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்"
— Sun News (@sunnewstamil) May 11, 2025
-நடிகர் ரஜினிகாந்த் பேட்டி#SunNews | #IndiaPakistan | @rajinikanth pic.twitter.com/AztH0kDWPJ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com