close
Choose your channels

மீண்டும் இணைகிறதா 'அண்ணாத்த' கூட்டணி?

Monday, September 6, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒருபக்கம் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் தொடங்க தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் முதல்படியாக அண்ணாத்த’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் ’அண்ணாத்த’ படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த் மற்றும் சிறுத்தை சிவா ஆகிய இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும் இந்த படத்தை மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே லைக்கா நிறுவனம் ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ள நிலையில் ரஜினியின் அடுத்த படம் எது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.