விக்னேஷ் சிவனுடன் தொலைபேசியில் பேசிய ரஜினிகாந்த்: காரணம் இதுதான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தொலைபேசியில் பேசி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிய ’ராக்கி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாரதிராஜா மற்றும் வசந்த் ரவியை நேரில் அழைத்து பாராட்டினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். விக்னேஷ் சிவனுடன் தொலைபேசியில் பேசிய ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ளது

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தலைவர் ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து இன்று தொலைபேசி வந்தது. எனக்கும் நயன்தாராவுக்கும் அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் எனது காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தலைவர் அவர்கள் கொடுத்த மன உறுதியை வார்த்தைகளால் விளக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

More News

எதிர்பாராததை எதிர்பாருங்கள்: சைகை மூலம் எவிக்சனை சொல்லும் கமல்!

எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்று கமல்ஹாசன் சைகை மூலம் கூறும் புரோமோ விடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது.

எதிர்பாராத திருப்பம்: இந்த வாரம் டபுள் எவிக்சன், யார் யார் தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை குறைந்த வாக்குகள் பெற்ற போட்டியாளர் ஒருவர் வெளியேற்றப்படுவார் என்பதும் அந்த வகையில் இந்த வாரம் அக்சரா வெளியேற்றப்பட்டார்

தாமரை, பிரியங்கா, அக்சரா, அமீரை கேள்விகளால் துளைத்தெடுக்கும் கமல்ஹாசன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒவ்வொரு போட்டியாளரும் தனியாக கன்ஃபக்சன் அறைக்கு அழைத்து பல கேள்விகள் கேட்க இருப்பதாக கமல்ஹாசன் கூறி இருந்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

'எவன் வந்தாலும் சரி, நான் பாத்துக்கிறேன்' பிக்பாஸ் வருணின் 'ஜோஸ்வா இமைபோல் காக்க' டிரைலர்

பிக்பாஸ் சீசன் 5 போட்டியாளர்களில் ஒருவரான வருண் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய 'ஜோஸ்வா இமை போல் காக்க' என்ற திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது. 

'ராக்கி' படத்தை பார்த்தபின் ரஜினிகாந்த் செய்தது என்ன தெரியுமா? வைரல் புகைப்படம்!

சமீபத்தில் வெளியான 'ராக்கி'  படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் செய்த செயல் குறித்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.