அறிவில்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு செல்கிறார்கள்.. ரஜினிகாந்த் வீடியோ வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி சில பெரியவர்களும் அறிவில்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு செல்கிறார்கள் என்றும் இந்திய பாரம்பரிய கலாச்சாரத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் ரஜினிகாந்த் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் பாரத சேவா தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இதில் ரஜினிகாந்த் பேசிய காணொளி ஒளிபரப்பப்பட்டது. அதில் இந்த செல்போன் யுகத்தில் இளைஞர்கள், ஏன் சில பெரியவர்கள் கூட நம் பாரத நாட்டின் மகத்தான சில சம்பிரதாயம் கலாச்சாரம் அருமை பெருமைகள் தெரியாமல் உள்ளனர். அதற்கான அறிவு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் மேற்கத்தியவர்கள் அவர்களின் கலாச்சாரம், சம்பிரதாயத்தில் சந்தோஷம் கிடைக்கவில்லை என்று கூறி, இந்தியாவின் பக்கம் வந்து கொண்டிருக்கின்றனர். யோகா போன்ற வாழ்வியலை அவர்கள் நாடுகிறார்கள்.
ஆகவே, நம்முடைய பாரத நாட்டின் மகத்தான கலாச்சாரம், சம்பிரதாயம், அருமை, பெருமையை கொண்டு போய் இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும். விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக லதா எடுக்கும் அனைத்து முயற்சிகளும் ஆண்டவன் அருளால் வெற்றியடைய வேண்டும். இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என் கூறியுள்ளார்.
பாரத நாட்டின் கலாச்சாரம், பெருமைகளை இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் ...#Thalaivar 🤘 #Superstar #Rajinikanth #BharathaSeva #CelebrateBharatham #LathaRajinikanth @rajinikanth #BinaryPost pic.twitter.com/qj7DRuAIkt
— Binary Post (@BinaryPost001) April 30, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments