close
Choose your channels

'காலா' படத்தின் முக்கிய பணியில் ரஜினிகாந்த்

Saturday, January 20, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் நடித்த '2.0' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. இவற்றில் '2.0' வரும் ஏப்ரல் மாதமும் அதனையடுத்து ஜூன் அல்லது ஜூலையில் 'காலா' படமும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'காலா' படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது என்று வெளிவந்த செய்தியினை பார்த்தோம். தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது பகுதியின் டப்பிங் பணியை தொடங்கியுள்ளார். இந்த டப்பிங் பணியை அவர் இன்னும் ஓரிரு நாட்களில் முடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'காலா' படத்தில் ரஜினிகாந்த், நானாபடேகர், சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷினெடே, ஹூமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சுகன்யா உள்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.