இது சாதாரண அடி அல்ல, பிசாசுத்தனமான அசுர அடி: ரஜினிகாந்த் அறிக்கை

  • IndiaGlitz, [Tuesday,June 09 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வப்போது தனது சமூகவலைதளத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து பதிவு செய்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும் அவ்வப்போது பதிவு செய்துள்ளார். தனிமனித இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு கூறிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்

இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். ’ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு’ என்று கூறியிருக்கும் ரஜினிகாந்த், இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ்‌ தொற்றால்‌ அவதிப்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ ஏழை. எளிய மக்களுக்கு இடைவிடாமல்‌ தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும்‌ ரஜினி மக்கள்‌ மன்ற நிர்வாகிகளுக்கும்‌,உறுப்பினர்களுக்கும்‌ எனது மனமார்ந்த பாராட்டுக்களையும்‌ மகிழ்ச்சியையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும்‌ கொரோனா எனும்‌ அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கலங்க வைத்திருக்கும்‌ பிசாசுத்‌தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில்‌ பல விதங்களில்‌ நமக்குப்‌ பல கடுமையான வேதனைகளை தரும்‌.

உங்களது குடும்பத்தாரின்‌ எல்லா தேவைகளையும்‌ பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான்‌ உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும்‌ சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும்‌, முகக்‌ கவசத்தை
அணியாமலும்‌ இருக்காதீர்கள்‌.

ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு

இவ்வாறு ரஜினிகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

More News

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ் அரசின் அதிரடி முடிவு!!!

உலகம் முழுவதும் கொரோனா பரவலால் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த 3 மாதமாக மூடிக் கிடக்கிறது.

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல புதிய களிமண் எரிமலைகள்!!!

செவ்வாய் கிரகம் என்பது எரிமலை வெடிப்புக்கு பெயர் போனது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம். இந்த கிரகத்தில் எரிமலைகள் வெடிப்பதும் புதிய எரிமலைகள் உருவாவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கணவரின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுத மேக்னா ராஜ்: உருக வைக்கும் வீடியோ

நடிகர் அர்ஜுன் நெருங்கிய உறவினரும் நடிகை மேக்னா ராஜின் கணவருமான நடிகர் சிரஞ்சீவி திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம், கன்னட திரையுலகில் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

10ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் கணக்கீடு எப்படி? முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொது தேர்வு ஜூன் 15ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 10ஆம் வகுப்பு தேர்வு ரத்து

கேள்விக்குறியாகி இருக்கும் ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றி: அமெரிக்காவில் தொடரும் இனவெறிக்கு எதிரான போராட்டம்!!!

அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இந்தாண்டு இறுதியில் நடைபெற இருக்கிறது.