close
Choose your channels

அமெரிக்கா செல்கிறாரா ரஜினிகாந்த்? என்ன காரணம்?

Wednesday, May 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். அவரது காட்சிகளின் படப்பிடிப்பை முதலில் முடித்துவிட்டு அவரை பாதுகாப்புடன் சென்னைக்கு அனுப்ப வேண்டும் என்று படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர். அனேகமாக இன்னும் ஒரு சில நாட்களில் ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ’அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்டு வரும் ஜூன் மாதம் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஜினிகாந்த் அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்துகொள்வது வழக்கம். அந்த வகையில் வரும் ஜூன் மாதம் அவர் அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஏற்கனவே ஹாலிவுட் படப்பிடிப்பிற்காக சென்ற தனுஷும் அவருடன் சென்ற ஐஸ்வர்யாவும் அமெரிக்காவில் தான் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.