சிவாஜி படப்பிடிப்பில் மறக்க முடியாத நாட்கள்: விவேக் மறைவு குறித்து ரஜினிகாந்த்!

  • IndiaGlitz, [Saturday,April 17 2021]

சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார் செய்தி திரையுலகை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விவேக் மரணம் குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

சின்ன கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. ‘சிவாஜி’ படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்

ஷங்கர் இயக்கிய ‘சிவாஜி’ திரைப்படத்தில் ரஜினியுடன் விவேக் நடித்திருந்தார் என்பதும், இருவரும் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றும் ரசிக்கும் வகையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.