சிஸ்டம் சரியில்லை என்ற சொன்ன ரஜினியின் கருத்து மாறியது ஏன்? அமைச்சர் பேட்டி

  • IndiaGlitz, [Thursday,July 19 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் அரசியலில் குதிக்க உள்ளதாக உறுதி செய்தபின்னர் 'ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகளை தேர்வு செய்து அரசியல் கட்சி தொடங்க அடித்தளம் அமைத்து வருகிறார்

தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும், ஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பதை விரைவில் பார்ப்பீர்கள் என்று கூறி வந்த ரஜினிகாந்த், கடந்த சில நாட்களாக தமிழக ஆளும் கட்சிக்கு ஆதரவான கருத்துக்களையே தெரிவித்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

காவல்துறைக்கு ஆதரவாகவும், போராட்டங்களுக்கும் எதிராகவும் பேசிய ரஜினிகாந்த் சமீபத்தில் தமிழக கல்வி அமைச்சர் சிறப்பாக செயல்படுவதாகவும் கூறினார். மேலும் கமல்ஹாசன் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்த்து வரும் சென்னை-சேலம் 8 வழிச்சாலை தேவையான ஒன்று என்றும் ரஜினிகாந்த் கருத்து கூறியுள்ளார்.

இந்த நிலையில் ரஜினியின் இந்த மாற்றம் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'சிஸ்டம் சரியில்லை என்று சொன்ன ரஜினி எங்களின் ஆட்சியையும் கொள்கைகளையும் புரிந்து கொண்டது வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் ரஜினிகாந்த் கைப்பற்ற போவதாக அரசியல் வதந்திகள் பரவி வரும் நிலையில் இருதரப்பினர்களும் மாறி மாறி ஒருவரை ஒருவர் பாராட்டி வருவது இந்த வதந்திக்கு வலு சேர்க்கும் வகையில் உள்ளது.

More News

'சர்கார்' பிரச்சனை: விஜய்க்கு ஆதரவளித்த விஜய்சேதுபதி

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் கடந்த மாதம் வெளியானது

கல்வி அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த பிரபல நடிகரின் மகள்

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஒரு நியூட்ரியனிஸ்ட் என்பதும் அவர்  உலகப் புகழ் பெற்ற 'அக்சய பாத்திரம்' என்னும் தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக சேவை செய்து வருகிறார்

பகலில் ஆசிரியர், இரவில் டான்: ரஜினிக்கு மீண்டும் ஒரு 'நான் சிகப்பு மனிதன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் தொடங்கிவிட்டது.

கொடூரமாக கொலை செய்தால்கூட பத்தாது: சிறுமியை சீரழித்தவர்கள் குறித்து விஜய்சேதுபதி

சென்னையில் உள்ள அபார்ட்மெண்ட் ஒன்றில் 11 வயது சிறுமியை 22 பேர் கொடூரமாக பல மாதங்கள் பாலியல் வன்புணர்வு செய்துள்ள கொடுமையை கண்டு தமிழகமே கொதித்து எழுந்துள்ளது

ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்குக் கார்த்தி அதிரடி பதில்

நடிகர் கார்த்தி நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படம் தமிழகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி சொல்ல கார்த்தி