காவேரி மருத்துவமனைக்கு ரஜினிகாந்த் வரும் நேரம்

  • IndiaGlitz, [Tuesday,July 31 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் டேராடூனில் முடிவடைந்ததை அடுத்து இன்று ரஜினிகாந்த் சென்னை திரும்பவுள்ளதாக செய்திகள் வெளிவந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

அந்த வகையில் இன்று இரவு ரஜினிகாந்த் சென்னை திரும்பவுள்ளதாகவும், அதனையடுத்து அவர் உடனே தனது நீண்ட கால நண்பர் திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் காவேரி மருத்துவமனைக்கு செல்லவுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.

இப்போது வெளிவந்துள்ள தகவலின்படி இன்று இரவு 9 மணிக்கு ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனைக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சற்றுமுன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியை நேரில் சந்தித்தார். ரஜினிக்கும் கருணாநிதியை சந்திக்க அனுமதி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அடுத்த பட அறிவிப்பு

ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய இருவர் நடித்த 'கபாலி' மற்றும் 'தெறி' ஆகிய இரு படங்களையும் ஒரே நேரத்தில் தயாரித்து இரண்டு படங்களையும் வெற்றிப்படங்களாக ஆக்கியவர் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு

கருணாநிதியை நேரில் பார்த்த ராகுல்காந்தி: புகைப்படம் வெளியானது

திமுக தலைவர் கருணாநிதி கடந்த நான்கு நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடைய உடல்நலம் குறித்து  அறிந்து கொள்வதற்காக ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வந்தார்.

ஜெயம் ரவி பட இயக்குனரின் அடுத்த படத்தில் விஷால்?

விஷால் தற்போது இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் 'சண்டக்கோழி 2' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளார்.

ஜெய்யின் 'ஜருகண்டி' சென்சார் தகவல்

ஜெய நடிப்பில் அவருடைய நண்பர் நிதின்சத்யா தயாரிப்பில் உருவாகி வந்த 'ஜருகண்டி' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில்

ஃபேஸ்புக் நட்பால் ஏற்பட்ட விபரீதம்: சென்னையில் நிர்வாண வீடியோ கும்பல் கைது 

ஃபேஸ்புக் நட்பை பயன்படுத்தி நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டும் சென்னை கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர்.