திடீரென காரை நிறுத்தி சின்ன கோவிலில் பூஜை செய்த ரஜினிகாந்த்.. வீடியோ வைரல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக காரில் சென்று கொண்டிருந்த போது, ஒரு சின்ன கோயிலின் பூசாரியின் வேண்டுகோளுக்காக காரில் இருந்து இறங்கி அந்த கோவிலில் வழிபட்டு பூசாரியின் ஆசிர்வாதத்தை ஏற்றுக்கொண்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’ஜெயிலர் 2’ என்ற படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில், அணைக்கட்டி என்ற பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்புக்கு செல்வதற்காக காரில் ரஜினிகாந்த் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியில் உள்ள ஒரு சின்ன கோவிலின் பூசாரி, ரஜினிகாந்தின் காரை நிறுத்தி, தனது கோயிலுக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்தார்.
அவருடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட ரஜினிகாந்த். காரிலிருந்து இறங்கி, அந்த கோவிலுக்கு சென்று சாமி வழிபட்டார். அதன் பிறகு, பூசாரி ரஜினியின் நெற்றியில் விபூதி பூசி, அவருக்கு பிரசாதங்களை கொடுத்து பின்னர் வழி அனுப்பி வைத்தார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பு அணைக்கட்டி பகுதியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருப்பதாகவும், அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
என் #Thalaivar 🙏 😍
— ஸ்ரீநி (@kitchasri) April 25, 2025
வாழும் மகான் 🙏😍
என்ன ஒரு அன்பு, அடக்கம் 🙏😍
நீங்கள் நல்லா சந்தோசமா எப்பவுமே இப்படி இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் தலைவா 🙏😍#superstar #Rajinikanth #ThalaivarNirandharam #50YearsOfRAJINISM #SuperstarSupramacy pic.twitter.com/gvDOi02oGf
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments