கமல்ஹாசன் வீட்டிற்கு திடீரென விசிட் செய்த லதா ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக உள்ளார். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் நேற்று கமலஹாசன் வீட்டில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

கமல்ஹாசனின் சகோதரரும் தேசிய விருது பெற்ற நடிகருமான சாருஹாசனுக்கு நேற்று 90 ஆவது பிறந்தநாள் என்பதால் இந்த பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கமலஹாசனின் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் கொண்டாடப்பட்ட இந்த விழாவில் ஸ்ருதிஹாசன், சுஹாசினி உள்பட கமல்ஹாசனின் ஒட்டுமொத்த குடும்பத்தினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ரஜினிகாந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் ’தலைவர் 168’ படப்பிடிப்பில் ரஜினிகாந்த் இருப்பதால் அவரால் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் அவரது சார்பாக லதா ரஜினிகாந்த் இந்த விழாவில் கலந்து கொண்டார். கமலஹாசன் குடும்பத்தினருடன் லதா ரஜினிகாந்த் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விழா குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘எங்கள் அனைவருக்கும் அண்ணனாகவும், வழிகாட்டியாகவும், தந்தையாகவும், இன்று வரை புரட்சிக்காரனாகவே வாழ்ந்துவரும் எங்கள் மூத்த அண்ணன் சாருவிற்கு இன்று 90 வயது. வாழ்த்துக்களுடனும் வணக்கங்களுடனும் உங்கள் நான்’ என்று கூறியுள்ளார்.

More News

பார்த்திபனின் 'ஒத்தசெருப்பு' இந்தி ரீமேக்கில் 'பேட்ட' நடிகர்!

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் நடித்து இயக்கிய 'ஒத்த செருப்பு' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் பாராட்டுகளைப் பெற்றது என்பது தெரிந்ததே

'தர்பார்' ரிலீஸ் தேதியில் 'பட்டாஸ்': படக்குழுவினர்களின் அதிரடி முடிவு

இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக ஜனவரி 9ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படமும் ஜனவரி 16 ஆம் தேதி தனுஷ் நடித்த 'பட்டாஸ்' திரைப்படமும் வெளியாகும்

'மாஸ்டர்' படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் இணைந்து நடித்து வரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

தாய்-மகள்களிடம் கள்ளக்காதல்: வெளிநாட்டில் இருந்து திரும்பியவருக்கு நேர்ந்த கதி!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒரு நபர், பெண் ஒருவரிடம் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருடைய மகள்களிடமும் கள்ளக்காதலில் ஈடுபட்ட முயற்சி செய்ததால்

'தல அஜித்தின் 'வலிமை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தல அஜித் நடிப்பில், இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில், தயாரிப்பாளர் போனி கபூரின் தயாரிப்பில் உருவாகி வரும் 'வலிமை' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.