close
Choose your channels

அஜித்துக்கு வாழ்த்து கூறி 'ஜெயிலர் 2' அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்..

Thursday, April 10, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தின் படப்பிடிப்பிற்காக கோவைக்கு செல்லும் போது, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ’குட் பேட் அக்லி’ திரைப்படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், "அந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்" என கூறினார். அதேவேளை, 'ஜெயிலர் 2' படத்தின் அப்டேட்டும் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'கூலி' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஆகஸ்ட் 14 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் 'ஜெயிலர் 2' படத்தில் நடித்து வருகிறார்.

நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்டம் கோவையில் நடைபெற உள்ளது. அதற்காக, இன்று சென்னையில் இருந்து கோவைக்கு செல்ல விமான நிலையத்திற்கு வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, குமரி அனந்தன் மறைவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, "குமரி அனந்தன் ஒரு நல்ல அரசியல் தலைவர். அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்" என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, "கூலி படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகின்றன; ஆகஸ்ட் 14ஆம் தேதி அந்த படம் வெளியாகும்" என்றும் கூறினார்.

'ஜெயிலர் 2' படப்பிடிப்பு எப்போது முடியும் எனக் கேட்டதற்கு, "படப்பிடிப்பு இப்போதுதான் தொடங்கியுள்ளது. எப்போது முடியும் என எனக்கு தெரியாது" என்றார்.

மேலும், ’குட் பேட் அக்லி’ படம் இன்று ரிலீஸாகியுள்ளது, அது குறித்து உங்கள் கருத்து என்ற கேள்விக்கு, "அஜித்துக்கு எனது வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.

இதனைப்பற்றி வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment