என்ன ஒரு ரைட்டிங்... 'டிராகன்' குழுவினர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து..!


Send us your feedback to audioarticles@vaarta.com


திறமையான இயக்குனர்கள் புது முகங்களாக இருந்தாலும், அவர்களை வீட்டுக்கு வரவழைத்து பாராட்டு தெரிவிப்பது ரஜினிகாந்தின் வழக்கம். ஏற்கனவே, பல சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றபோது, அவர் படக்குழுவினர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில், சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவான "டிராகன்" திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படம் 10 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில், இந்த படத்தின் குழுவினர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் வீட்டுக்கு அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். “என்ன ஒரு ரைட்டிங்! அஸ்வத் பென்டாஸ்டிக்! பென்டாஸ்டிக்!” என்று கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அஸ்வத் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
“நல்ல படம் பண்ணணும், படத்தை பார்த்து ரஜினி சார் வீட்டுக்கு கூப்பிட்டு ஆசி பண்ணி நம்ம படத்தைப் பார்த்து பேசணும், இது இயக்குனராக ஆக வேண்டும் என்று உழைக்கும் ஒவ்வொரு அசிஸ்டென்ட் இயக்குனரின் கனவு. அந்த கனவு நிறைவேறிய நாள் இன்று!” என்று அஸ்வத் மாரிமுத்து பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அஸ்வத் மாரிமுத்துவுடன் பிரதீப் ரங்கநாதன் மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Rajini sir : what a writing Ashwath ! Fantastic fantastic !!🥹🥹
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) March 5, 2025
nalla padam pannanum, padatha pathutu Rajini sir veetuku kooptu wish panni namma padatha pathi pesanum !! Ithu director aganum nu kasta patu ozhaikra ovoru assistant director oda Kanavu ! Kanavu neraveriya nal… pic.twitter.com/IFuHhNkqjY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments