'லால் சலாம்' ரிலீஸ் நாளில் இரண்டாவது தாய்க்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்..!

  • IndiaGlitz, [Friday,February 09 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’லால் சலாம்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ள நிலையில் முதல் காட்சி முடிந்ததுமே இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. எனவே இந்த படம் வசூலில் சாதனை செய்யும் என்றும் வெற்றி படம் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் தனது மகள் ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் அவர் கூறியிருப்பதாவது: என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய 'லால் சலாம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

ஏற்கனவே சமீபத்தில் நடைபெற்ற 'லால் சலாம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான் உடல்நிலை சரியில்லாத போது ஐஸ்வர்யா தன்னை மிகுந்த கவனத்துடன் பார்த்துக் கொண்டதாகவும், என்னை பொருத்தவரை ஐஸ்வர்யா எனது இரண்டாவது தாய் என்றும் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யாவை தனது தாய் என்று அவர் தனது வாழ்த்து செய்தி குறிப்பிட்டு இருந்தது நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

மேலும் தான் உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது தன்னை கவனித்துக் கொண்ட ஐஸ்வர்யாவின் புகைப்படத்தையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

More News

2026ல் விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெகவின் வேற லெவல் திட்டம்..!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தளபதி விஜய் தொடங்கிய நிலையில் தற்போது அடுத்த கட்டமாக கட்சியின் முதல் மாநாடு நடத்துவது, கட்சியின் நிர்வாகிகளை

ED ரெய்டுக்குள்ளான பிரபல நிறுவனத்தின் மீதான வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

அமலாக்கத்துறை சோதனைக்கு உள்ளான பிரபல கட்டுமான நிறுவனமான ஓசன் லைப் பேசஸ் நிறுவன இயக்குனர் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ரஜினியின் இன்னொரு கேமியோ படம்.. மகள் தான் இயக்குனர்.. ஹீரோ யார் தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்த 'லால் சலாம்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் இன்னொரு திரைப்படத்திலும்

சசிகுமாரின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்.. 5 மொழிகளில் விரைவில் ரிலீஸ்..!

சசிகுமார் நடித்த அடுத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில்

வில்லனாக நடிக்க மாட்டேன் என்று சொன்ன விஜய் சேதுபதி.. ஆனால் இந்த படத்தை அவரால் மறுக்க முடியலையா?

சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் இனிமேல் வில்லனாக நடிக்க மாட்டேன் என்று விஜய் சேதுபதி கூறிய நிலையில் பிரபல நடிகரின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததை அடுத்து அந்த